திருச்செங்கோட்டில் கேஸ் சிலிண்டர் டெலிவரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் ஊழியர்களை, முன்களப்பணியாளர்களாக அறிவித்து, அரசின் சலுகைகள் வழங்கக்கோரி திருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2021-06-30 10:36 GMT

திருச்செங்கோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், கேஸ் டெலிவரி  தொழிலாளர்கள் கோரிக்கை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டர் டெலிவரிமேன் யூனியன் நாமக்கல் மாவட்டக்குழு சார்பில், திருச்செங்கோடு வேளாண் கூட்டுறவு உற்பத்தியாளர் விற்பனை சங்கம் வளாகம் அருகே, கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் கலந்து கொண்ட அடையாள வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

இதில், கொரோனா காலத்திலும் பணியாற்றி வரும் சிலிண்டர் டெலிவரிமேன்களை, தமிழக அரசு முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்;  இஎஸ்ஐ இபிஎப் உள்ளிட்ட அரசின் சட்ட சலுகைகளை கேஸ் சிலிண்டர் டெலிவரி மேன் தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தி தரவேண்டும்; டெலிவரி மேன்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு,  மாநில செயற்குழு உறுப்பினர் முருகானந்தன் தலைமை தாங்கினார். நாமக்கல் மாவட்ட செயலாளர் பூபதி ராஜா, மாவட்ட தலைவர் கே.பாரதி மற்றும் துணை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News