'துாய்மை இந்தியா' திட்டத்தில் கழிப்பிடம் இல்லாதவர்கள் கழிப்பிடம் கட்ட விண்ணப்பிக்க அழைப்பு..!
'துாய்மை இந்தியா' திட்டத்தில் கழிப்பிடம் இல்லாதவர்கள் கழிப்பிடம் கட்ட விண்ணப்பிக்கலாம் என, பா.ஜ., நிர்வாகி அழைப்பு விடுத்துள்ளார்.
ராசிபுரம்: 'துாய்மை இந்தியா' திட்டத்தில் கழிப்பிடம் இல்லாதவர்கள் கழிப்பிடம் கட்ட விண்ணப்பிக்கலாம் என, பா.ஜ., நிர்வாகி அழைப்பு விடுத்துள்ளார்.
முழு இந்தியாவிலும் கழிப்பிட வசதி
இந்தியா முழுவதும் கிராமம், பேரூராட்சி, நகராட்சி மாநகராட்சி பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஒவ்வொரு வீடுகளிலும் கழிப்பிடம் இல்லாதவர்களுக்கு அனைவருக்கும் கழிப்பிட வசதி திட்டத்தின் கீழ், 12,000 ரூபாய் வரை மானியம் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் கழிப்பிடம் கட்டிக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை
வீடுகளில் கழிப்பிடம் இல்லாதவர்கள், தங்களுக்கு தேவை என்றால் அருகில் ஊராட்சி அலுவலகம் மற்றும் பேரூராட்சி அலுவலகத்தில் சென்று விண்ணப்பம் எழுதிக்கொடுத்து பயன்பெறலாம்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
- ஆதார் கார்டு
- வங்கி பாஸ்புக்
- ரேஷன் கார்டு
- சிட்டா
- இரண்டு புகைப்படங்கள்
விண்ணப்பிக்க உகந்த நேரம்
ஊராட்சி அலுவலகம் மற்றும் பேரூராட்சி அலுவலகங்கள் திறந்திருக்கும் நேரத்தில் எந்த நேரத்திலும் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் இல்லை.
தமிழக பா.ஜ.,வின், மத்திய அரசு திட்டங்கள் பிரிவின் மாநில துணைத்தலைவர் லோகேந்திரன் இந்த செய்தியை வெளியிட்டுள்ளார்.