புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்கு பட்டா

தமிழக அரசு திட்டம், புறம்போக்கு நிலத்தினருக்கு வழங்கப்படும் பட்டா;

Update: 2025-03-21 03:50 GMT

புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க அளவீடு பணி தீவிரம்

ராசிபுரம்: தமிழக அரசு ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலத்தில் குடியிருக்கும் நபர்களுக்கு பட்டா வழங்க முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் சுமார் 86,000 பேருக்கு பட்டா வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பணிகளை ஆறு மாதங்களில் முடிக்க வேண்டும் என தமிழக முதல்வர் வருவாய்த்துறைக்கு உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல் கட்டமாக பயனாளிகளை கிராம நிர்வாக அலுவலர்களும் (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளர்களும் (ஆர்.ஐ.) தேர்வு செய்து அனுப்பியுள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகாவில் வெண்ணந்தூர் பகுதியில் அதிகபட்சமாக 95 பேர் விண்ணப்பித்துள்ளனர். மற்ற பகுதிகளில் முத்துகாளிப்பட்டி ஊராட்சியில் 23 பேர், ராசிபுரத்தில் 21 பேர், ஆர்.புதுப்பட்டி டவுன் பஞ்சாயத்தில் 12 பேர், நாமகிரிப்பேட்டையில் 14 பேர், அத்தனூரில் 3 பேர், ஆர்.புதுப்பாளையத்தில் 5 பேர், கட்டனாச்சினம்பட்டியில் 22 பேர், பிள்ளாநல்லூரில் 9 பேர், கோனேரிப்பட்டியில் 39 பேர், சி.எஸ்.புரத்தில் 46 பேர், அணைப்பாளையத்தில் 1 பேர், அரியாகவுண்டம்பட்டியில் 7 பேர், வெள்ளக்கல்பட்டியில் 5 பேர் என மொத்தம் 302 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் ராசிபுரம் நகராட்சியில் 60 பேர், நகராட்சியில் இருந்து 8 கி.மீ. அப்பால் உள்ள பகுதியில் 97 பேர், டவுன் பஞ்சாயத்தில் 145 பேர் என பிரிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News