காளியம்மன் கோவிலில் மகா குண்டம் மற்றும் ஊஞ்சல் உற்சவ விழா
குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் வாண வேடிக்கை மற்றும் ஊஞ்சல் உற்சவம் பக்தர்களின் ஆனந்தம்;
குமாரபாளையத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் கடந்த வாரம் ஐந்தாம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த ஆண்டு திருவிழா நிகழ்ச்சிகள் மிகவும் கோலாகலமாக நிறைவடைந்தன, முதலில் மகா குண்டம் மற்றும் தேர் திருவிழாவுடன் தொடங்கிய இந்த பத்து நாள் விழாவில், அம்மன் திருக்கல்யாணம், வண்டி வேடிக்கை, வாண வேடிக்கை, மஞ்சள் நீராட்டு மற்றும் அம்மன் திருவீதி உலா போன்ற பல்வேறு பாரம்பரிய நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும் நடைபெற்றன, இறுதி நாளான நேற்று ஊஞ்சல் உற்சவ விழா நடைபெற்றது, இதில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று அம்மனை வழிபட்டு ஆசிபெற்றனர், அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது, இந்த விழா ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் திரு. தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர், பத்து நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில் சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளாசி பெற்றுள்ளனர்.