மாநில அளவிலான பெண்களுக்கான வாலிபால் போட்டி..! சென்னை அணி முதலிடம்

நாமக்கல் அடுத்த துாசூரில் நடந்த, மாநில அளவிலான பெண்களுக்கான வாலிபால் போட்டியில் சென்னை அணி முதலிடம் பிடித்து கோப்பையை வென்றது.;

Update: 2025-01-17 10:23 GMT

நாமக்கல் : நாமக்கல் அடுத்த துாசூரில், இளம்புலி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி, மாநில அளவிலான பெண்கள் வாலிபால் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. 27ம் ஆண்டாக கடந்த, 14, 15ம் தேதி இரவு வாலிபால் போட்டி நடந்தது.

அதில், சென்னை போலீஸ் அணி, ஜே.பி.ஆர்., அணி, பனிமலர் அணி, கோவை நிர்மலா அணி, பொள்ளாச்சி பி.கே.ஆர்., அணி, ஆத்துார் பாரதியார் அணி என, 6 அணிகள் விளையாடின. இந்த அணிகளில் ரயில்வே, பஞ்சாப், கேரளா அணிகளில் விளையாடி வரும் வீராங்கனைகளும் பங்கேற்றனர். தொடர்ந்து இரண்டு நாட்கள் விளையாடிய போட்டியில், 

♦ முதலிடம்: சென்னை ஜே.பி.ஆர்., அணி (கோப்பை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் பரிசு)

♦ இரண்டாமிடம்: பொள்ளாச்சி பி.கே.ஆர்., அணி

♦ மூன்றாமிடம்: சென்னை பனிமலர் அணி


நாமக்கல் மாவட்ட கைபந்து கழக இணைச்செயலாளர் கனகராஜ் கூறியதாவது:

நாமக்கல்-துறையூர் சாலையில் உள்ள துாசூரில் இளம்புலி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாநில அளவிலான பெண்கள் கைப்பந்து போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், 27ஆம் ஆண்டாக நடப்பாண்டு கைப்பந்து போட்டியுடன் கபாடி போட்டியும் நடத்துகிறோம். 

இந்த போட்டிகளை விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்கும், பொதுமக்களிடம் விளையாட்டு குறித்த ஆர்வத்தை துாண்டுவதற்காக நடத்துகிறோம். மேலும் போலீஸ் தேர்வு, ஐ.சி.எப்., ரயில்வே போன்ற அரசு துறை வேலை வாய்ப்பிலும் முன்னுரிமை கிடைக்கும் என்பதற்காக நடத்துகிறோம். பொதுமக்களிடம் இருந்தும், விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்கிடமிருந்தும் எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எப்போதும் தொடர்ந்து நடத்துவோம். இவ்வாறு கூறினார்.

போட்டி ஏற்பாடுகள்

போட்டி ஏற்பாடுகளை, மாவட்ட கைப்பந்து கழக பொருளாளர் அருணகிரி, செயலாளர் சதாசிவம், இணை செயலாளர் கனகராஜ், பொருளாளர் சந்தோஷ்ராம், இளம்புலி ஸ்போர்ட்ஸ் கிளப் ஆலோசகர் தண்டபாணி உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

Tags:    

Similar News