நாமக்கல் அருகே முத்துக்காப்பட்டியில் 25-ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா..!

நாமக்கல் அருகே முத்துக்காப்பட்டியில் 25-ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா நேற்று நடைபெற்றது.;

Update: 2025-01-17 07:09 GMT

நாமக்கல் அருகே முத்துக்காப்பட்டியில் 25-ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பெரியண்ணகவுண்டா் குமாரசாமி அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்த விளையாட்டுப் போட்டிகளை பொறியாளா் அமெரிக்கா கே. செல்வம் தொடங்கி வைத்தாா்.

பல்வேறு போட்டிகள்

மாரத்தான், இசை நாற்காலி, கயிறு இழுத்தல், வழுக்கு மரம் ஏறுதல், பானை உடைத்தல், ஓட்டப்பந்தயம், கோலப்போட்டி, கபடி போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

சிறப்பு அழைப்பாளா்கள்

சிறப்பு அழைப்பாளா்களாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச. ராஜேஸ்கண்ணன், பழனி ஜி. பெரியசாமி, மக்களவை உறுப்பினா் வி. எஸ். மாதேஸ்வரன், முன்னாள் மக்களவை உறுப்பினா் ஏ. கே. பி. சின்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினா்.விழாவில் முத்துக்காப்பட்டி கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News