மாநகராட்சி பள்ளியில் கழிவுநீர் பிரச்சினை

மாணவர்கள் நலனுக்கு அச்சுறுத்தல், பள்ளி பின்புறத்தில் கழிவுநீர் பிரச்சினை;

Update: 2025-03-29 06:40 GMT

அரசு பள்ளி பின்புறம் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது

நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள காவேட்டிப்பட்டியில் செயல்பட்டு வரும் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். ஆனால் காவேட்டிப்பட்டி குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், வடிகால் வழியாக மாநகராட்சி நடுநிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் பின்புறம் குட்டைபோல் தேங்கி நிற்கிறது. போதிய வடிகால் வசதி இல்லாததால் கழிவுநீர் தொடர்ந்து வெளியேற முடியாமல் தேங்கியுள்ளது. இதன் காரணமாக கடும் துர்நாற்றம் வீசுவதுடன், அந்த இடம் விஷ ஜந்துக்களின் வசிப்பிடமாகவும் மாறியுள்ளது. இதனால் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவியர், பணிபுரியும் ஆசிரியர்கள் மட்டுமின்றி, அப்பகுதி மக்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சுகாதாரச் சீர்கேட்டால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து, போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News