குமாரபாளையம் பைபாஸ் மாரத்தான்
ஜே கே கே என் கலை அறிவியல் கல்லூரி 50 வது பொன் விழாவை முன்னிட்டு "RUN FOR WATER" RACE FOR HEALTH" என்ற மாரத்தான் நடைபெற உள்ளது;
குமாரபாளையத்தில் !! "RUN FOR WATER,
RACE FOR HEALTH" !என்ற முழக்கத்துடன் india's 1st AI empowered மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. ஏப்ரல் 6, 2025 அன்று காலை 5.30 மணிக்கு குமாரபாளையத்தில் JKKN பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ள இந்த சிறப்பு மாரத்தான் போட்டியில் 10 கிலோமீட்டர் மற்றும் 5 கிலோமீட்டர் தூரப் பிரிவுகள் இடம்பெறுகின்றன. மாரத்தான் போட்டியில் பங்கேற்க விரும்புவோர் ரூ.200 பதிவுக் கட்டணம் செலுத்தி ஆன்லைன் முறையில் பணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். முக்கியமாக, பள்ளி மாணவர்களுக்கு வயது அடிப்படையில் இலவச பதிவு வழங்கப்படுகிறது. இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு கவர்ச்சிகரமான பரிசுத் தொகைகள் காத்திருக்கின்றன. முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.7,000 மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.5,000 வழங்கப்படும்.
மேலும், பதிவு செய்த அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் சிறப்பு டி-சர்ட்டுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். பிரபல நடிகர் திரு. T. ஸ்ரீகாந்த் அவர்கள் இந்நிகழ்ச்சியின் முக்கிய விருந்தினராக கலந்து கொள்கிறார். குமாரபாளையத்தின் JKKN கல்வி நிறுவனங்கள் இந்த மாரத்தான் போட்டியின் அதிகாரப்பூர்வ ஏற்பாட்டாளராக உள்ளது. விவரங்களுக்கு 9788356060 என்ற தொலைபேசி எண் மற்றும் https://marathon.jkkn.ac.in/ தளத்திலும் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். நீர் பாதுகாப்பு மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் இந்த சிறப்பு மாரத்தான் போட்டியில் அனைவரும் பங்கேற்று பயனடையுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.