ராசிபுரம் நகரில் சாலை பணியால் போக்குவரத்து மாற்றம்
ராசிபுரம் சாலை பணியால் போக்குவரத்தில் மாற்றம், பேருந்து மற்றும் கனரக வாகனங்களுக்கு புதிய வழி;
ராசிபுரம் நகராட்சி பகுதியில் ஒரு வழிப்பாதையில் தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் போக்குவரத்தில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நகராட்சி ஆணையர் கணேசன் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சேலம், ஈரோடு, ஆட்டையாம்பட்டி, திருச்செங்கோடு ஆகிய பகுதிகளில் இருந்து வரும் கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் நகருக்குள் நுழையாமல், தேசிய நெடுஞ்சாலை வழியாக பழைய ஆர்.டி.ஓ. அலுவலகத்திலிருந்து ராசிபுரம் பைபாஸ் வழியாக சேந்தங்கலம் பிரிவு சாலையை அடைய வேண்டும். இந்த போக்குவரத்து மாற்றம் மார்ச் 29ம் தேதி வரை அமலில் இருக்கும் என்பதால், பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் இந்த அறிவிப்பை கவனத்தில் கொண்டு பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.