இராசிபுரத்தில் ரூ. 32 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

இராசிபுரத்தில் ரூ. 32 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது.;

Update: 2025-01-07 09:00 GMT

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கவுண்டம்பாளையை கிளையில், பருத்தி ஏலம் நேற்று (ஜன.6) நடைபெற்றது. இதில் ராசிபுரம், சிங்களாந்தபுரம், காக்காவேரி, குருசாமிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, விவசாயிகள் 1280 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

ஆர்சி ஆர்சிஎச் பருத்தி விலை

அதிகபட்சம் குவிண்டால் ரூ. 8,069

குறைந்தபட்சம் குவிண்டால் ரூ. 7,019

டிசிஎச் பருத்தி விலை

அதிகபட்சம் குவிண்டால் ரூ. 10,270

குறைந்தபட்சம் குவிண்டால் ரூ. 10,169

கொட்டு ரக பருத்தி விலை

அதிகபட்சம் குவிண்டால் ரூ. 5,099

குறைந்தபட்சம் குவிண்டால் ரூ. 4,300

நேற்று நடந்த ஏலத்தில் மொத்தமாக ரூ. 32 லட்சத்திற்கு பருத்தி ஏலம் எடுக்கப்பட்டது. இந்த ஏலத்தில் கலந்துகொள்ள சேலம், திருச்செங்கோடு, ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பருத்தி வியாபாரிகள் வருகை தந்திருந்தனர்.

Tags:    

Similar News