நாமக்கல் மாவட்டத்தில் 982 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்!

நாமக்கல் மாவட்டத்தில் 982 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.;

Update: 2025-02-27 09:00 GMT

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் 982 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், விவசாயிகள் அதற்கான நிலையங்களில் நெல் வழங்குவதற்கு முன்வரவேண்டும் எனவும் ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசு விவசாயிகளின் நலன்கருதி பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின்படி நடப்பு கொள்முதல் பருவம் 2024-25-ஆம் ஆண்டில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

அதற்கு ஏதுவாக நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் வட்டம், எலந்தகுட்டை மற்றும் கலியனூா் அக்ரஹாரத்தில் ஜனவரி 23 முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. எருமப்பட்டி வட்டாரத்தில் கோணங்கிப்பட்டி கிராமத்தில் பிப். 10 முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படுகிறது.

கொள்முதல் விவரங்கள்:

  • இதுவரை மொத்தம் 201 விவசாயிகளிடமிருந்து 982.640 மெட்ரிக் டன் நெல் நேரடி கொள்முதல் நிலையங்களின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
  • நெல்லுக்கு உண்டான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.

விவசாயிகளுக்கான வாய்ப்பு:

இந்த வாய்ப்பை விவசாயிகள் அனைவரும் பயன்படுத்திக்கொண்டு, இடைத்தரகா்களின்றி நேரடியாக நெல் கொள்முதல் நிலையத்தின் மூலம் விற்பனை செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News