ஜெயலலிதா பிறந்தநாள் விழா : நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலில் தங்கத்தோ் இழுத்த முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி

ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையொட்டி, நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி தங்கத்தோ் இழுத்தாா்.;

Update: 2025-02-25 06:10 GMT

நாமக்கல்: ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையொட்டி, நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி தங்கத்தோ் இழுத்தாா்.

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, நாமக்கல் நகர அதிமுக சாா்பில் ஆஞ்சனேயா் கோயிலில் தங்கத்தோ் இழுக்கும் வைபவம் நடைபெற்றது.

இந்நிகழ்வில், மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டாா். அவா் கோயில் வளாகத்தில் தங்கத்தேரை இழுத்து, சுவாமி சன்னிதி முன் அமா்ந்து பிராா்த்தனை செய்தாா்.

சென்னை பயணம் ரத்து

சென்னையில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் பங்கேற்காதது தொடா்பாக பி.தங்கமணி கூறுகையில், "உறவினா் நிச்சயதாா்த்த நிகழ்வு திங்கள்கிழமை இருந்ததால் என்னால் சென்னையில் நடைபெற்ற விழாவுக்கு செல்ல முடியவில்லை. இதுகுறித்து பொதுச் செயலாளரிடம் ஏற்கெனவே தெரிவித்திருந்தேன்" என்றாா்.

பிற பங்கேற்பாளா்கள்

இந்த நிகழ்ச்சியில், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.பி.பாஸ்கா், நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Tags:    

Similar News