பரமத்தி வேலூரில் ஊரடங்கில் ஊர் சுற்றிய இளைஞர்களின் வாகனங்கள் பறிமுதல்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுரில் ஊரங்கில் ஊர்சுற்றிய இளைூர்கள் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-05-24 10:30 GMT

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜாரணவீரன் தலைமையில் காவல் ஆய்வாளர் லட்சுமணன் மற்றும் காவலர்கள் நான்கு ரோட்டில் வாகன தணிக்கை செய்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனங்களில் வந்த பொது மக்களை தடுத்து நிறுத்தி என்ன காரணத்திற்காக வெளியே வருகிறீர்கள் என்று காவல்துறையினர் கேள்வி எழுப்பினர். எந்த ஒரு காரணமும் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களின் வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர் 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல் நிலையம் எடுத்துச்செல்லப்பட்டது.

மேலும் கொரோனா நோய் தொற்று அதிகமாக பரவுகிறது என்று பொதுமக்களிடம் காவல்துறையினர் கையெடுத்து கும்பிட்டு வெளியில் வராதீர்கள் உங்கள் காலில் கூட விழுகிறோம் தயவு செய்து வீட்டை விட்டு வெளியில் வராதீர்கள் என்று இரு கரம் கூப்பி கேட்டுக்கொண்டனர்

Tags:    

Similar News