ப.வேலூர் சந்தையில் நாட்டுக்கோழி விலை உயர்வு
ப.வேலூரில் நாட்டுக்கோழி விலை 650 ரூபாய்க்கு உயர்வு, அசைவ பிரியர்கள் சோகம்;
பரமத்தி வேலூர் அருகே சுல்தான்பேட்டையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும் வாரச்சந்தையில் நேற்று நாட்டுக்கோழி விலை கிலோவுக்கு 650 ரூபாய்க்கு உயர்ந்து அசைவ உணவு விரும்பிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது, இச்சந்தைக்கு பரமத்தி, பரமத்தி வேலூர், மோகனூர், நாமக்கல், திருச்செங்கோடு, கந்தம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகளும் விவசாயிகளும் நாட்டுக்கோழிகளை கொண்டு வந்திருந்தனர், கடந்த வாரம் கிலோ 550 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நாட்டுக்கோழி தற்போது கிலோவுக்கு 100 ரூபாய் அதிகரித்து 650 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது, இன்று முதல் பரமத்தி வேலூர் அருகே நன்செய் இடையார் அக்னி மாரியம்மன் திருவிழா தொடங்க இருப்பதால் சுற்றுவட்டார பொதுமக்கள் அடுத்த 15 நாட்களுக்கு விரதம் இருக்க உள்ளனர், விரதம் இருப்பதற்கு முன்பாக வீடுகளில் நாட்டுக்கோழி வாங்கி சமைக்க அசைவ உணவு விரும்பிகள் ஆர்வம் காட்டியதால் திடீரென விலை உயர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.