ஏப்ரல் 1ல் நாமக்கலில் புதுக்கணக்கு தொடக்கம்

புதுக்கணக்கு தொடக்க விழா, நாமக்கலில் தொழில் தலைவர்கள் ஆஞ்சநேயரிடம் பிரார்த்தனை;

Update: 2025-04-02 10:50 GMT

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வர்த்தக நிறுவனங்கள் புதுக்கணக்கு துவக்கம் செய்தனர். நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி மாநிலங்களிலிருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்யும் புனித ஸ்தலமாக விளங்குகிறது. குறிப்பாக தமிழ் மாதம் முதல் ஞாயிறு, அமாவாசை, பவுர்ணமி, ஆஞ்சநேயர் ஜெயந்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கில புத்தாண்டு போன்ற விசேஷ நாட்களில் இங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும். ஏப்ரல் 1 அன்று, நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்படும் ஏஜன்சிஸ், முட்டை ஏற்றுமதி நிறுவனங்கள், லாரி தொழில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக நிறுவனத்தினர் இக்கோவிலில் திரண்டு, சுவாமி பாதத்தில் தங்களது கணக்கு நோட்டுகளை வைத்து சிறப்பு பூஜை செய்து நடப்பாண்டுக்கான புதுக்கணக்கை துவக்கினர்.

Tags:    

Similar News