ஆன்லைன் நிறுவனங்களுக்கு இந்திய அனுமதியை கண்டித்து போராட்டம்: விக்கிரமராஜா

வெளிநாட்டு ஆன்லைன் நிறுவனங்களுக்கு, இந்தியாவில் அனுமதி வழங்கப்படுவதை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

Update: 2021-12-05 03:30 GMT

நாமக்கல்லில் நடைபெற்ற காய்கறி வியாபாரிகள் சங்க கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேசினார்.

நாமக்கல் நகர தினசரி மார்க்கெட்காய்கறி வியாபாரிகள் சங்கம் சார்பில், சங்க பெயர் பலகை திறப்பு விழா மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் மாகவட்ட பேரமைப்பு தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெயர் பலகையை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மத்திய அரசு ரெடிமேடு ஜவுளி ரகங்களுக்கான ஜிஎஸ்.டி வரியை 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்த அனுமதி அளித்துள்ளது. இதை திரும்பப்பெற வலியுறுத்தி மத்திய நிதி அமைச்சரை விரைவில் சந்திக்க உள்ளோம்.

மத்திய அரசு வணிக பயன்பாட்டிற்கான சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை ரூ.1,000 வரை உயர்த்தியுள்ளது. இதனால் உணவுபொருட்களின் விலை உயர வாய்ப்பு உள்ளது. எனவே மத்திய அரசு இந்த விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். அதேபோல் ö பட்ரோல், டீசல் விலை உயர்வையும் திரும்பப்பெற வேண்டும்.

இதை வலியுறுத்தி விரைவில் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்படும். கொரோனா தொற்று தாக்கியதால் உயி ரிழந்த 142 வியாபாரிகளில் மிகவும் நலிவடைந்த 32 வியாபாரிகளின் பட்டியலை முதலமைச்சருக்கு வழங்கி உள்ளோம். கொரோனா தொற்றின் நிலைமை சரியானவுடன் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

மழைக்காலங்களில் தக்காளி விலை உயர்வு இயல்பு தான். ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து இல்லை என்பதால் விலை உயர்ந்துள்ளது. வருகிற ஜனவரி மாதத்தில் காய்கறிகளின் வரத்து அதிகரிக்கும். அந்த நேரத்தில் அரசு குறைவான விலைக்கு காய்கறிகளை வாங்கி, கோல்டு ஸ்டோரேஜ் கிடங்குகளில் சேமித்து, விலை உயர்வு ஏற்படும் காலங்களில் குறை வான விலைக்கு விற்பனை செய்யலாம். வெளிநாட்டில் உள்ள ஆன்லைன் நிறுவனங் கள் நமது நாட்டில் கால் பதித் துள்ளன. இதனை எதிர்த்து டெல்லியில் போராடி உள்ளோம். மீண்டும் போராட் டம் நடத்த முடிவு செய்து உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து மாவட்ட பேரமைப்பு மற்றும் இணைப்பு சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் விக்கிரமராஜா கலந்துகொண்டு பேசினார்.

நிகழ்ச்சியில் மாநில மூத்த துணை தலைவர் பெரி யசாமி, மாநில துணைத் தலைவர்கள் செல்வராஜ். சங்கர், மாநில இணை செயலாளர் பத்ரி நாராயணன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், நாமக் கல் நகர தினசரி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் மனோகரன், செயலாளர் விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News