நீட் தேர்வு ரிசல்ட்: மாநில அளவில் நாமக்கல் மாணவர்கள் முதலிடம்
நீட் தேர்வில் நாமக்கல்லைச் சேர்ந்த 2 மாணவர்கள் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.;
கீதாஞ்சலி, பிரவீன், அர்ச்சிதா
இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேருவதற்காக கடந்த செப்டம்பர் மாதம் 12ம் தேதி, தேசிய தேர்வு முகமை மூலம் நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் நாமக்கல் கிரீன் பார்க் கோச்சிங் சென்டரில் படித்த மாணவி கீதாஞ்சலி, மாணவர் பிரவீன் ஆகியோர் 720க்கு 710 மதிப்பெண்கள் பெற்று தமிழக அளவில் முதலிடம் பெற்றுள்ளனர். இவர்கள் அகில இந்திய அளவில் 23வது ரேங்க் பெற்றுள்ளனர்.
இந்த மையத்தின் மாணவி அர்ச்சிதா 720க்கு 705 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றார். நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள்பெற்று சாதனை படைத்த மாணவ மாணவிகளை கிரீன் பார்க் கோச்சிங் சென்டர் சேர்மன் சரவணன், இயக்குனர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பாராட்டினார்கள். கிரீன் பார்க் மையம் கடந்த ஆண்டும் மாநில அளவில் முதலிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.