தேசிய பசுமைப்படை சார்பில் நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில் சமூக தூய்மைப்பணி

நாமக்கல் பசுமைப்படை மாணவர்கள் சார்பில், புதிய பஸ் ஸ்டாண்டில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் சமூக தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது.;

Update: 2025-03-13 12:50 GMT

நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில் தேசிய பசுமைப்படை சார்பில் நடைபெற்ற, பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் கலாநிதி கலந்துகொண்டு பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கினார்.

நாமக்கல்,

நாமக்கல் பசுமைப்படை மாணவர்கள் சார்பில், புதிய பஸ் ஸ்டாண்டில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் சமூக தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது.

நாமக்கல் தேசிய பசுமை படை அமைப்பு சார்பாக, நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் சமூக தூய்மைப்பணி நடைபெற்றது. கல்வித்துறை டிஇஒக்கள் பச்சமுத்து, ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பளர் ரகுநாத் வரவேற்றார். நாமக்கல் மாநகராட்சி மேயர் கலாநிதி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பசுமை உறுதிமொழியை வாசித்தார், அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து தூய்மைப்பணியை அவர் துவக்கி வைத்து பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மாநகராட்சி துணை மேயர் பூபதி, கவுன்சிலர் சங்கீதா, மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் திருமூர்த்தி ஆகியோர் நிகழ்ச்சியில் பேசினார்கள். நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டு பகுதியில் 100க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளின் பசுமைப் படை மாணவர்கள் கலந்து கொண்டு பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் சுமார் 250 கிலோ அளவிற்கான பிளாஸ்டிக் கழிவு பொருட்களை சேகரித்து மாநகராட்சி பணியாளர்களிடம் ஒப்படைத்தனர்.

மேலும், பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள மரக்கன்றுகளின் பராமரிப்பு பணியை நாமக்கல் மாவட்ட தேசிய பசுமைப் படை அமைப்பு மூலம் மேற்கொள்ள. அதன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரகுநாத் பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் தொடக்கமாக பஸ் ஸ்டாண்டில் உள்ள மரக்கன்றுகளுக்கு கோடைகால பராமரிப்பிற்காக கரை அமைக்கும் பணியினை, சேந்தமங்கலம் அரசு கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் பிரபு மேற்பார்வையில் பசுமைப்படை மாணவர்கள் மேற்கொண்டனர்.

Similar News