நாமக்கல் மாவட்ட விவசாயிகள் கடன் அட்டை பெற வரும் 1ம் தேதி சிறப்பு முகாம்

நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு வரும் 1ம் தேதி விவசாய கடன் அட்டை வழங்க சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

Update: 2022-04-22 02:00 GMT

பைல் படம்.

நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு, விவசாய கடன் அட்டை வழங்க சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்டத்தில் 93,089 விவசாயிகள் பிரதமரின் கிசான் கவுரவ நிதி திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர். அவர்களில் இதுவரை விவசாய கடன் அட்டை (கிசான் கிரிடிட் கார்டு) பெறாத விவசாயிகள் விவசாய கடன் அட்டை பெறும் வகையில், வருகிற மே 1-ந் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

இம்முகாமில் விவசாய கடன் அட்டை பெறுவதற்கான படிவங்கள் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டு தொடர்புடைய வங்கிகளுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பின்பு வங்கிகள் விண்ணப்பத்தினை பரிசீலனை செய்து விவசாய கடன் அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கும். விவசாய கடன் அட்டை மூலம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வரை வங்கிகளில் கடன் பெற்று பயன்பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News