கொரோனா விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை துவக்கி வைத்த கலெக்டர்
நாமக்கல்லில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கலெக்டர் ஸ்ரேயாசிங் கொடியசைத்து துவக்கி வைத்தார்.;
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் அடிப்படையில் 75 வது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சார்பில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சார வாகனம் அமைக்கப்பட்டுள்ளது,
நாமக்கல் மவாட்டத்தில் பிரச்சார வாகனத்தை கலெக்டர் ஸ்ரேயாசிங் கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர்,
பொதுமக்கள் அரசு அறிவுத்துள்ள கொரோன பாதுகாப்பு நெறிமுறைகளை தவறாது கடைப்பிடிக்க வேண்டும். 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் அரசு வழிகாட்டுதலின்படி தவறாமல் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கூறினார்.
பிரச்சார வாகனம் நாமக்கல் பஸ் நிலையம், உழவர் சந்தை, திருச்செங்கோடு பஸ் நிலையம், வாலரை கேட், மார்க்கெட், பள்ளிபாளையம் பஸ் நிலையம், குமாரபாளையம் பஸ் நிலையம் மற்றும் ராசிபுரம் பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து மக்களுக்கு கொரோனா நோய்தொற்றை கட்டுப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபடும்.
நிகழ்ச்சியில் மருத்துவத்துறை இணை இயக்குநர் (பொ) ராஜ்மோகன், சுகாதாரத்துறை உதவி இயக்குநர் நக்கீரன், நலக்கல்வியாளர் சொக்கலிங்கம், தாய்சேய் நல அலுவலர் தனலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.