கொல்லிமலையில் மர்ம விலங்குகள் கடித்து 4 ஆடுகள் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை
கொல்லிமலையில் மர்ம விலங்குகள் கடித்து, 4 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொல்லிமலையில் மர்ம விலங்குகள் கடித்து, 4 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை கீழ்வளவு கிராமத்தைச் சேர்ந்தவர் மயில்சாமி. இவர் நேற்று முன்தினம் ஆடுகளை மேய்த்து வீட்டுக்கு ஓட்டி வந்தார். இரவு வழக்கம்போல் தனது வீட்டு அருகே உள்ள பட்டியில் வளர்ப்பு ஆடுகளை கட்டி வைத்துள்ளார். அடுத்த நாள் காலை வழக்கம்போல் ஆடுகள் அடைத்து வைத்திருந்த பட்டிக்கு சென்றுள்ளார்.
அப்போது இரு ஆடுகள் மட்டும் மர்ம விலங்கு கடித்த நிலையில் உயிரிழந்து கிடந்தன. அதிர்ச்சியடைந்த மயில்சாமி சம்பவம் தொடர்பாக கொல்லிமலை வனச்சரக அலுவலகத்தில் புகார் செய்தார். இதுபோல் கொல்லிமலை இலக்கியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் என்பவருக்கு சொந்தமான இரு ஆடுகளும் மர்ம விலங்குகள் கடித்து உயிரிழந்து கிடந்தன.
வனத்துறையினர் சம்ப இடத்திற்கு சென்று இதுகுறித்து விசாரணை நடத்தினார்கள். மர்ம விலங்கின் காலடி தடத்தை ஆய்வு செய்து அந்த மிருகத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.