நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பேற்பு
நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலராக, ராமன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், இந்த ஆண்டு ஆசிரியர்களைப் போல், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் முறையை அறிமுகப்படுத்தியது. மாநிலம் முழுவதும் உள்ள 110 கல்வி மாவட்டங்களில் பணியாற்றும் டிஓக்கள், விதிமுறைகளுக்கு உட்பட்டு, முன்னுரிமை அடிப்படையில், விருப்பமான இடங்களை தேர்வு செய்து, இடமாறுதல் பெற்றனர். நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலராக பாலசுப்ரமணியம் பணியாற்றினார். அவர், இடமாறுதல் கவுன்சிலிங்கில் சங்ககிரிக்கு மாறுதல் பெற்று சென்றார்.
பெருந்துறை மாவட்ட கல்வி அதிகாரியாக பணியாற்றி வந்த ராமன், நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலராக இடமாறுதல் பெற்றார். இதையொட்டி இன்று, நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு வந்த அவர் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு, பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.