செயற்கை நுண்ணறிவும், இயற்பியல் கற்பித்தலும்: புத்தக வெளியீட்டு விழா

நாமக்கல் மாவட்ட ஆசிரியர்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், செயற்கை நுண்ணறிவும், இயற்பியல் கற்பித்தலும் என்ற புத்தகம் வெளியிட்டு விழா நடைபெற்றது.;

Update: 2025-04-04 11:00 GMT

நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், செயற்கை நுண்ணறிவும், இயற்பியல் கற்பித்தலும் என்ற புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட ஆசிரியர்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், செயற்கை நுண்ணறிவும், இயற்பியல் கற்பித்தலும் என்ற புத்தகம் வெளியிட்டு விழா நடைபெற்றது.

முதுநிலை விரிவுரையாளர் வேலு வரவேற்றார். பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் தலைமை வகித்துப் பேசியதாவது:

செயற்கை நுண்ணறிவானது, 1960ல், எலிசா என்ற பெயரில் தொடங்கப்பட்டிருந்தாலும், இயற்பியல் கற்பித்தலுக்கான செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது என்பது, முதன்முறையாக கையாளப்படுவதால், கற்பித்தலுக்கானச் செயற்கை நுண்ணறிவை இணைக்கும் ஒரு தொடக்கப்புள்ளியாக இப்பயிற்சி இருக்கும். மேலும், செயற்கை நுண்ணறிவு பாடக்கருத்துக்களை விரிவாக்கவும், எடுத்துக்காட்டுகளைக் கொடுக்கவும், தற்போதைய நிகழ்வுகளை கூறவும், பாடப்பொருளின் வளர்ச்சிக்கு துணை செய்யவும், ஆசிரியர்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தலாம். இவ்வாறு அவர் பேசினார்.

கோவை, அரசு மகளிர் பி.எட் கல்லூரி உதவிப் பேராசிரியர் மணிகண்டன் பேசும்போது, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் ஆசிரியர்களுக்கு, பணிச்சுமை குறையும். கற்பித்தலை உயிரோட்டமுள்ளதாக மாற்றவும் முடியும் என்றார். ‘செயற்கை நுண்ணறிவும் இயற்பியல் கற்பித்தலும் என்ற புத்தகத்தை பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் வெளியிட, கோவை அரசு மகளிர் பி.எட். கல்லூரி உதவிப்பேராசிரியர் மணிகண்டன் பெற்றுக் கொண்டார். சேலம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் பீட்டர் ஆனந்த், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட் பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Similar News