பரமத்திவேலூர் அருகே 17 ஆடுகளை கடித்து கொன்ற மர்ம விலங்கு!
பரமத்திவேலூர் அருகே 17 ஆடுகளை கடித்து கொன்ற மர்ம விலங்கு!;
பரமத்திவேலூர் :பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் சரளைமேட்டில் வசித்து வருபவர் துரைசாமி (55). இவர் ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாட்டு பொங்கலை முன்னிட்டு, பொங்கல் வைத்து ஆடுகளுக்கு பூஜை செய்யப்பட்டு, சரளை மேட்டில் உள்ள வீட்டுக்கு சென்று உள்ளார்.
ராஜூவின் அதிர்ச்சி
நேற்று காலை தோட்டத்தில் வேலை செய்யும் ராஜூ (50), என்பவர் பார்த்தபோது, பட்டியில் இருந்த, 17 ஆடுகள் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
போலீசார் விசாரணை
சம்பவம் இடத்துக்கு வந்து போலீசார் விசாரித்தனர். நாமக்கல் மாவட்ட கால்நடை, வனத்துறையினர் மர்ம விலங்கு கடித்ததா அல்லது தெரு நாய்கள் கடித்ததா என ஆய்வு செய்தனர்.
பிரேத பரிசோதனை
இறந்த ஆடுகளை, பிரேத பரிசோதனை செய்வதற்காக ராசிபுரம் கால்நடை மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். இறந்த ஆடுகளின் மதிப்பு, ஒரு லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய் இருக்கும் என உரிமையாளர் துரைசாமி தெரிவித்தார்.