பள்ளிப்பாளையம் ஆர்.எஸ். சாலையில் சீரமைக்கப்படாத பள்ளம்
பள்ளிப்பாளையம் சாலையில் சீரமைக்கப்படாத பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்;
பள்ளிப்பாளையம் பகுதியின் முக்கிய வழித்தடமான ஆர்.எஸ். சாலையில் நிலவும் ஆபத்தான நிலைமை குறித்து வாகன ஓட்டிகள் கவலை தெரிவித்துள்ளனர். இச்சாலையின் கீழே செல்லும் பிரதான குடிநீர் குழாய் கடந்த வாரம் சேதமடைந்ததால், பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டி பழுதுபார்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பணி முடிந்த பின்னர் பள்ளம் முறையாக சீரமைக்கப்படாமல் மேடு பள்ளமாக விடப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், குறிப்பாக இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் வயதானவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். தற்காலிக பாதுகாப்பு நடவடிக்கையாக பேரிகார்டுகள் வைக்கப்பட்டிருந்தாலும், கவனக்குறைவாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, இப்பகுதியில் உள்ள பள்ளத்தை உடனடியாக சீரமைத்து, வாகனங்கள் பாதுகாப்பாக செல்ல வழிவகை செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.