குமாரபாளையம் பள்ளிகளில் பூஜ்ய நிழல் தினம் கடைபிடிப்பு
குமாரபாளையத்தில் பூஜ்ய நிழல் தினம் கடைபிடிக்கப்பட்டது.;
குமாரபாளையத்தில் பூஜ்ய நிழல் தினம் கடைபிடிக்கப்பட்டது.
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப துறையின் கீழ் இயங்கும் விக்யான் பிரசார் நிறுவனம், அறிவியல் பலகை, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மையம் வழிகாட்டல் படி பூஜ்ஜிய நிழல் தினம் செயல்வழி மூலம் விளக்கப்பட்டது.
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஆடலரசு, வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கவுரி, மேற்குகாலனி நடுநிலைப்பள்ளி, கவுசல்யா, அரசு உதவிபெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியை சுகந்தி, சின்னப்பநாயக்கன்பாளையம் துவக்கப்பள்ளி தலைமைஆசிரியை கற்பகம் தலைமையில் பள்ளி மாணவ, மாணவர்களுக்கு பூஜ்ய நிழல் தினம் விளக்கம் தரப்பட்டது. மாணவ, மாணவியர்கள் இதில் ஆர்வமுடன் பங்கேற்றனர். இல்லம் தேடி கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விடியல் பிரகாஷ், என்.சி.சி. பயிற்சியாளர் அந்தோணிசாமி, பள்ளிக்கல்வி பதுகாப்பு இயக்க ஆசிரியை லதா, அண்ணாதுரை, லெனின் உள்பட பலர் பங்கேற்றனர்.