சீறிப்பாயும் காவிரி ஆற்றில் இளைஞர்களின் மரண விளையாட்டு: காவல்துறை கவனிக்குமா

குமாரபாளையம் காவிரி வெள்ளத்தில் சில வாலிபர்கள் குதித்து அவர்களின் உயிரோடு விளையாடுவதை போலீஸார் தடுக்க வேண்டும்

Update: 2022-08-03 10:00 GMT

குமாரபாளையம் காவிரி வெள்ளத்தில் சில வாலிபர்கள் குதித்து மரண விளையாட்டில் ஈடுபட்டு  வருவது குறித்து சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர்.

மேட்டூர் அணை நிரம்பியதால் உபரி நீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு காவிரி கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காவிரி வெள்ளத்தை பார்வையிட பழைய காவிரி பாலத்தின் மீது பொதுமக்கள் திரண்டு வருகின்றனர். இதனால் தனது சாகசங்களை வெளிபடுத்தும் விதமாக சில வாலிபர்கள் பாலத்தின் மீதிருந்து காவிரி வெள்ளத்தில் குதிக்கிறார்கள். இதனை கண்ட பார்வையாளர்களும் குதிக்க தொடங்குகிறார்கள். இதனால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், பாலத்தின் மீது போலீசார் நியமித்து அத்துமீறும் வாலிபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேடிக்கை பார்க்கும் கும்பலை சேர்ந்த நபர்களின் டூவீலர்கள் திருடு போகும் சூழ்நிலையும் உருவாகி வருகிறது. ஆகவே போலீசார் அதனையும் தடுக்க வேண்டும்.


Tags:    

Similar News