குமாரபாளையம்; அரசு கலைக்கல்லூரியில் இளைஞர் எழுச்சி நாள் நிகழ்ச்சி!
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளைஞர் எழுச்சி நாள் நிகழ்ச்சி நடந்தது.;
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த இளைஞர் எழுச்சி நாள்
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளைஞர் எழுச்சி நாள் நிகழ்ச்சி நடந்தது.
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக இளைஞர் எழுச்சி நாள் நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமையில் நடந்தது.
இதில் ரேணுகா பேசியதாவது:
விவேகானந்தர் சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இள வயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார்.அவர் மனதில் இறை உண்மைகளைப் பற்றி பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன. இறைவனைப் பலர் வழிபடுவதும், உலகின் வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்துள்ளதும் அவருக்கு முரண்பாடாக தோன்றியது. இது பற்றி பல பெரியோர்களிடம் விவாதித்தார்;
அப்துல் கலாம் இந்திய அறிவியலாளரும், நிர்வாகியும் ஆவார். இவர் இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றினார்.. இவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும் நாற்பது ஆண்டுகள் விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் பங்களிப்பால், இவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று பிரபலமாக அறியப்படுகிறார். 1998 ஆம் ஆண்டில் நடந்த போக்ரான் 2 அணு ஆயுத பரிசோதனையில் நிறுவன, தொழில்நுட்ப, ரீதியாக இவர் முக்கிய பங்காற்றினார்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் பேராசிரியர்கள் அனுராதா, சரவனாதேவி, இரகுபதி, ஞானதீபன், பத்மாவதி, கோவிந்தராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.