21 மாணவ மாணவியர் அசத்திய யோகா உலக சாதனை
குமாரபாளையத்தில் 21 மாணவ மாணவியர் யோகா உலக சாதனை செய்து அசத்தினர்;
குமாரபாளையத்தில் 21 மாணவ மாணவியர் யோகா உலக சாதனை செய்து அசத்தினர்
21 மாணவ மாணவியர் அசத்திய யோகா உலக சாதனை - குமாரபாளையத்தில் 21 மாணவ மாணவியர் யோகா உலக சாதனை செய்து அசத்தினர்.
குமாரபாளையம் அரவிந்த் யோகா மையம் சார்பில் உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது. அமைப்பாளர் அரவிந்த் தலைமை வகித்தார். அ.தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலர் குமரேசன், முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர் வெங்கடேசன் போட்டிகளை துவக்கி வைத்தனர். இதில் 21 மாணவ மாணவியர் யோகா உலக சாதனை செய்து அசத்தினர். இது குறித்து அரவிந்த் கூறியதாவது:
நமது யோகா மையம் சார்பில் உலக அளவிலான பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று, நமது மாணவர்கள் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர். தற்போது அதற்கெல்லாம் முத்தாய்ப்பாக நோபிள் வோர்ல்ட் ரெகார்ட்ஸ் எனும் உலக சாதனை அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்வில் பங்கேற்று அனைவரும் அசத்தியுள்ளது மிகவும் மகிழ்ச்சி. போட்டிக்காக மட்டும் நடத்தப்படும் நிகழ்ச்சி யோகா அல்ல. உடல் ஆரோக்கியத்திற்கும் யோகா ஒவ்வொருவர் வாழ்விலும் அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார். இதில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர்.