நூல் விலை உயர்வு: உண்ணாவிரதத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு

குமாரபாளையத்தில் நூல் விலை உயர்வு தொடர்பாக உண்ணாவிரதத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.;

Update: 2022-05-15 09:15 GMT
நூல் விலை உயர்வு: உண்ணாவிரதத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு

பைல் படம்.

  • whatsapp icon

குமாரபாளையம் வட்டார ஜவுளி தொழில் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நூல் விலை உயர்வை கண்டித்து மே 16ல் குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலை பகுதியில் ஜவுளி உற்பத்தியாளர்கள் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனிடையே உண்ணாவிரதம் நடத்த போலீசாரால் அனுமதி மறுக்கப்பட்டது. இதுகுறித்து போராட்டக்குழுவினர் கூறியதாவது:

நூல் விலை உயர்வை கண்டித்து மே 16ல் குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலை பகுதியில் ஜவுளி உற்பத்தியாளர்கள் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் போலீசார் அனுமதி மறுத்தனர். ஆர்ப்பாட்டம் செய்ய மட்டும் அனுமதி கிடைத்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News