உலக தண்ணீர் தினம் பேச்சுப்போட்டி

குமாரபாளையத்தில் உலக தண்ணீர் தினம் குறித்து, பேச்சுப்போட்டி நடந்தது.;

Update: 2025-03-26 16:45 GMT

உலக தண்ணீர் தினம்

பேச்சுப்போட்டி

குமாரபாளையத்தில் உலக தண்ணீர் தினம் குறித்து, பேச்சுப்போட்டி நடந்தது.

குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக குமாரபாளையம் தளிர்விடும் பாரதம் சார்பில் தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து பேச்சுப்போட்டி நடந்தது.

தலைமை ஆசிரியை கௌசல்யாமணி தலைமை வகித்தார்.

பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பேச்சு போட்டியில் பங்கேற்று தண்ணீரின் முக்கியத்துவம் மற்றும் அதன் பயன்பாடுகள் சேமிப்பு பற்றி பேசி, தங்களது தனித்திறனை வெளிப்படுத்தினர். சிறப்பு அழைப்பாளராக பள்ளிபாளையம் ஒன்றிய வானவில் மன்ற கருத்தாளர் குணசேகரன் பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கினார்.

படவிளக்கம் :

குமாரபாளையத்தில் உலக தண்ணீர் தினம் குறித்து, பேச்சுப்போட்டி நடந்தது.

Similar News