குமாரபாளையத்தில் உலக செவிலியர் தின விழா கொண்டாட்டம்

குமாரபாளையம் தளிர்விடும் பாரதம் சமூக சேவை அமைப்பின் சார்பில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.

Update: 2023-05-12 15:25 GMT

உலக செவிலியர் தினத்தையொட்டி குமாரபாளையம் தளிர்விடும் பாரதம் சார்பில் செவிலியர்களுக்கு பரிசாக புத்தகங்கள் வழங்கப்பட்டன.

குமாரபாளையம் தளிர்விடும் பாரதம் சமூக சேவை அமைப்பின் சார்பில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.

பெரும் நோய் வாய்பட்டவர்களை தங்களது கரங்களால் தொட்டு பணிவிடை செய்து காப்பாற்றும் உன்னதமான பணியை செய்பவர்கள் செவிலியர்கள். அவர்களின் சேவைகள், தியாகங்களை அங்கீகரிக்கும் விதமாக 1965 முதல் சர்வதேச செவிலியர்கள் அமைப்பால் உலக செவிலியர் தினம், ஆண்டுதோறும் மே 12ல் கொண்டாடப்பட்டு வருகிறது.

குமாரபாளையம் தளிர்விடும் பாரதம் சமூக சேவை அமைப்பின் சார்பில் சின்னப்பநாயக்கன்பாளையம் நகர துணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலைவர் சீனிவாசன் தலைமையில் இன்று செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. ஆலோசகர் செந்தில், உறுப்பினர்கள் வரதராஜன், சரண்யா பிரபு, சித்ராபாபு, ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் தலைவர் சீனிவாசன் பேசும் பொழுது, உலகில் கோடிக்கணக்கான செவிலியர்கள் உள்ளனர், நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதில் டாக்டர்களுக்கு பக்கபலமாக பணியாற்றும் செவிலியர்களின் சேவை போற்றத்தக்கது. மேலும் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு தாய்க்கு நிகரான அன்பும் பரிவும் கொண்டு பொறுமையுடன் ஆற்றும் அரும் பணிதான் செவிலியர் பணி.நோயாளிகளை காப்பாற்ற மருந்து இருந்தால் மட்டும் போதாது. நோயின் தன்மை அறிந்து நோயாளிகளை தேற்றும் தாயுள்ளம் வேண்டும். எனவே செவிலியர்கள் தாய்க்கு நிகரானவர்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

செவிலியர்கள் 21 பேருக்கு பரிசாக புத்தகங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. நிர்வாகிகள் செந்தில், சித்ரா, வரதராஜன், சரண்யா, ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதனை தொடர்ந்து  தளிர்விடும் பாரதம் சார்பில் 11ம் ஆண்டு விழா அமைப்பாளர் சீனிவாசன் தலைமையில் நடந்தது. இதில் நகரில் உள்ள 7 அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கோடை காலத்தில் நான் என்ற தலைப்பில் பேச்சுபோட்டி, தண்ணீர் சிக்கனம் என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு டாக்டர் நடராஜன், மக்கள் நீதி மய்யம் நகர மகளிரணி அமைப்பாளர் சித்ரா, தொழிலதிபர் மகேந்திரன், ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் வினோத்குமார், ஓவியர் சசிகுமார், தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர் ஸ்ரீகாந்த், ஆகியோர் புத்தகங்கள் பரிசாக வழங்கி பாராட்டினர். உலக புத்தக தினத்தையொட்டி புத்தக வாசிப்பு நிகழ்ச்சி நடந்தது. நிர்வாகி பிரபு புத்தகம் வாசிக்க, மாணவ, மாணவியர் அதனை பின்பற்றி வாசித்தனர். நிர்வாகி வரதராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


Tags:    

Similar News