ஸ்ரீசக்திமயில் நர்ஸிங் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் உலக மனநல நாள் விழா..!

ஸ்ரீசக்திமயில் நர்ஸிங் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் உலக மனநல நாள் விழா..!

Update: 2023-10-11 12:30 GMT

நிகழ்ச்சி நடைபெற்ற இடம் : அரசு தலைமை மருத்துவமனை ஈரோடு

நிகழ்ச்சி நடைபெற்ற தேதி : அக்டோபர் 10, 2023

நிகழ்ச்சி நடைபெற்ற நேரம் : காலை 08.30 மணி

தலைமை: டாக்டர் வெங்கடேசன், எம்.பி.பி.எஸ் (எம்.டி) (குழந்தைகள் நிபுணர்) (எம்.எஸ்) அரசு தலைமை மருத்துவ மனை, ஈரோடு


முன்னிலை: டாக்டர் கவிதா எம்.பி.பி.எஸ் (டி.ஜி.ஓ) (ஆர்.எம்.ஓ) அரசு தலைமை மருத்துவ மனை, ஈரோடு

வரவேற்புரை: டாக்டர் கவிதா எம்.பி.பி.எஸ் (டி.ஜி.ஓ) (ஆர்.எம்.ஓ) அரசு தலைமை மருத்துவ மனை, ஈரோடு

சிறப்பு விருந்தினர்: டாக்டர் வெங்கடேசன், எம்.பி.பி.எஸ் (எம்.டி) (குழந்தைகள் நிபுணர்) (எம்.எஸ்) அரசு தலைமை மருத்துவ மனை, ஈரோடு

தலைமை உரை: டாக்டர் கவிதா எம்.பி.பி.எஸ் (டி.ஜி.ஓ) (ஆர்.எம்.ஓ) அரசு தலைமை மருத்துவ மனை, ஈரோடு


சிறப்பு விருந்தினர் உரை: டாக்டர் வெங்கடேசன், எம்.பி.பி.எஸ் (எம்.டி) (குழந்தைகள் நிபுணர்) (எம்.எஸ்) அரசு தலைமை மருத்துவ மனை, ஈரோடு.

செய்தி: குமாரபாளையம், ஸ்ரீசக்திமயில் செவிலியர் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், உலக மனநல நாள் அக்டோபர் 10 ம் தேதி காலை 08:30 மணிக்கு கொண்டாடப்பட்டது. ஈரோடு, அரசு தலைமை மருத்துவமனையின் மதிப்பிற்குரிய டாக்டர் வெங்கடேசன், எம்.பி.பி.எஸ் (எம்.டி) (குழந்தைகள் நிபுணர்) (எம்.எஸ்), டாக்டர் கவிதா எம்.பி.பி.எஸ் (டி.ஜி.ஓ) (ஆர்.எம்.ஓ) மற்றும் அரசு தலைமை மருத்துவமனை, ஈரோடு ஆகியோர் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

விழா, டாக்டர் கவிதா எம்.பி.பி.எஸ் (டி.ஜி.ஓ) (ஆர்.எம்.ஓ) வரவேற்புரையுடன் தொடங்கியது. விழாவில் மனநல ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாக ஆண்டு தோறும் அக்டோபர் 10ஆம் தேதி உலக மனநல ஆரோக்கிய நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. உலக மனநல தினம் பொதுவாக மன ஆரோக்கியத்தைப் பற்றி பேசுவதற்கு ஒரு வாய்ப்பை உருவாக்குகிறது. மனநல ஆரோக்கியத்தை சுற்றியுள்ள களங்கத்தை எவ்வாறு உடைப்பது? மனநல பிரச்னைகள் பற்றி பேசுவதன் அது தொடர்பான சிக்கல்கள் பற்றி புரிந்து கொள்ள உதவுகிறது.

உலகளவில் 10-19 வயதுடைய 7 பேரில் ஒருவர் மனநல நிலைமைகளை அனுபவித்தாலும் இவர்கள் பெரும்பாலும் சிகிச்சை பெறாமல் இருக்கிறார்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம். இதனால் இவர்களுக்கு கல்வி சிக்கல்கள், ஆபத்து உண்டு செய்யும் நடத்தைகள், உடல் ஆரோக்கியம் மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்ற பாதிப்புகள் உண்டாகலாம்.


இந்த நாளில், மனநல பிரச்னையுடன் இருப்பவர்களுடன் உரையாடுவதோடு, பணியிடத்தில் ஏற்படும் மனஅழுத்தம், மனச்சோர்வு குறித்தும், மனநல பிரச்னைகளுடன் வாழும் மக்களின் பராமரிப்பாளர்கள் மற்றும் குடும்பங்களுக்கு தேவையான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்க வேண்டும்.மனநலம் சார்ந்த சிகிச்சையை அணுகுவதற்கு தடையாக இருக்கும் சிக்கல்கள் மற்றும் தயக்கம் குறித்து தெளிவுபடுத்தி அதன் தேவைகள் குறித்து புரிய வைக்க வேண்டும்.

உணர்ச்சி கோளாறுகள் இளம் பருவத்தினரிடையே பொதுவானவை. கவலை கோளாறுகள் வயதானவர்களை விட இளவயதில் பொதுவானது. 10-14 வயது கொண்டவர்களில் 3.6 % கவலை கோளாறு மற்றும் 1.1% மனச்சோர்வும் 15-19 வயது கொண்டவர்களில் 4.6 % கவலை கோளாறு மற்றும் 2.8% மனச்சோர்வும் கொண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது அவர்களது கல்வியை பாதிக்கும் சமூக விலகல் மற்றும் தனிமையை அதிகப்படுத்தும்.

மனச்சோர்வு தற்கொலையை தூண்டும். டீனேஜ் வயதினர் எதிர்கால வாழ்க்கையில் என்னவாக போகிறோம் என்று தீர்மானிக்கும் கட்டத்தை எட்டியிருப்பார்கள். இது பெரும்பாலும் பரிசோதனைக்கான வலுவான தூண்டுதலாக அவர்களை மாற்றும். இந்நிலைக்கு தயாராக அவர்கள் மன ஆரோக்கியத்தை பாதுகாக்க எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. அதே போன்று வெளிப்புற தாக்கங்களுக்கு முன்கூட்டியே அடிபணிவதை தவிர்க்க வேண்டும். இந்நிலையில் மன நலம் குறித்த சவால்கள் இருந்தால் நண்பர்கள் அல்லது மனநல நிபுணரிடம் ஆலோசனை பெற தயங்க கூடாது.


டீன் ஏஜ் வயதினர் மனத்தெளிவை பேணுவது அவசியம். அதிக எண்ணிக்கையிலான தேர்வுகளால் ஏற்படும் குழப்பத்தை தவிர்க்க மனம் ஆரோக்கியமாக வைத்துகொள்ளும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும். மனநலம் தக்கவைக்க முறையான பயிற்சிகள், தியானம் யோகா போன்றவை கை கொடுக்கும்.

இந்த ஆண்டுக்கான உலக மனநல நாள் கருபொருளாக, "மனநலம் என்பது உலகளாவிய மனித உரிமை" என அமைந்துள்ளது. கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு ரங்கோலி கோலம் மட்டும் விழிப்புணர்வு நாடகம் மூலம் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

நன்றி உரை: டாக்டர் கவிதா எம்.பி.பி.எஸ் (டி.ஜி.ஓ) (ஆர்.எம்.ஓ) அரசு தலைமை மருத்துவ மனை, ஈரோடு

Tags:    

Similar News