குமாரபாளையம் அரசு பள்ளியில் உலக காற்று தினம் காெண்டாட்டம்
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக காற்று தினம் கொண்டாடப்பட்டது.
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உலக காற்று தினம் கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் ஆடலரசு தலைமை வகித்தார். வண்ண, வண்ண பலூன்கள் காற்றில் பறக்க விட்டு காற்றின் முக்கியத்துவம் உணர்த்தப்பட்டது.
தலைமை ஆசிரியர் ஆடலரசு பேசியதாவது:- காற்றின் அளவை அதிகரிக்கவும், தூய்மையான காற்றை பெறவும் மரங்களை அதிகம் நட வேண்டும். காற்று மாசு படாமல் இருக்க வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் 25 மரக்கன்றுகள் நடப்பட்டன. ஆசிரியர்கள் சுதர்சன், முனிராஜ், என்.சி.சி. மாணவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.