குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்ய மாநில நிர்வாகிகளுக்கு மகளிர் அணியினர் வரவேற்பு
குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்ய மாநில நிர்வாகிகளுக்கு மகளிர் அணியினர் வரவேற்பளித்தனர்.;
மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டங்கள் நேற்று, இன்று ஆகிய இரு நாட்கள் நடைபெறுகிறது.
இந்த கூட்டங்களில் பங்கேற்பதற்காக கட்சியின் மாநில துணை தலைவர் தங்கவேல், மாநில செயலர் மயில்சாமி, மாநில மகளி அணி செயலர் மூகாம்பிகா ஆகியோர் கோவையில் இருந்து சேலம் நோக்கி காரில் சென்றனர். அப்போது குமாரபாளையம் சேலம் கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவு பகுதியில் குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில் நகர செயலர் சித்ரா தலைமையில், ரேவதி, உஷா, மல்லிகா உள்ளிட்ட பலர் பங்கேற்று மாநில நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி வரவேற்றனர்.
உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்களிடம் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டிய கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன் படம் போட்ட, பிரச்சார வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை மகளிர் அணியினர் வசம் ஒப்படைத்தனர். குமாரபாளையம் நிர்வாகிகளுக்கு மாநில நிர்வாகிகள், உள்ளாட்சி தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ளவ் வேண்டிய ஆலோசனைகள் கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.