பெண்கள் கபடிப் போட்டி: பிரம்மதேசம் அணியினர் முதலிடம் பெற்று சாதனை
குமாரபாளையம் காளியம்மன் திருவிழாவையொட்டி நண்பர்கள் குழுவின் சார்பில் நடைபெற்ற பெண்கள் கபடிப் போட்டியில் பிரம்மதேசம் அணியினர் முதலிடம் பெற்று சாதனை படைத்தனர்.;
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காளியம்மன், மாரியம்மன் மாசித்திருவிழாவையொட்டி நண்பர்கள் குழுவின் சார்பில் மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டி நடைபெற்றது. தலைவர் இளங்கோ தலைமை வகித்தார்.
சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 28 அணியினர் பங்கேற்றனர். இதில் முதல் பரிசு சக்தி பிரதர்ஸ், பிரம்மதேசம் அணியினரும், 2ம் பரிசு சேலம், 3ம் பரிசு ஏ.வி.எஸ். அணியினரும், திருவண்ணாமலை அணியினரும், 4ம் பரிசு ஜெய் சிஸ்டர்ஸ், பள்ளிபாளையம் அணியினரும் பெற்றனர்.
வெற்றி பெற்ற அணியினருக்கு ரொக்கப்பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. இதில் சங்க துணை தலைவர் சின்னுசாமி, செயலர் தங்கவேலு, துணை செயலர் பச்சமுத்து, பொருளர் சரவணகுமார், ஆலோசகர் மகாலிங்கம், நிர்வாகி ஹரிஹரன் உள்பட பலரும் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
ஆண்களுக்கான கபடி போட்டி பகல், இரவு போட்டியாக நடைபெற்று வருகிறது.