குமாரபாளையத்தில் மகளிர் தின விளையாட்டு போட்டிகள்

மகளிர் தின விழாவையொட்டி குமாரபாளையத்தில் மகளிர் குழுவினர் சார்பில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.;

Update: 2024-03-05 14:00 GMT

குமாரபாளையத்தில் மகளிர் குழுவினரின் சார்பில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

சர்வதேச மகளிர் தினவிழா மார்ச் 8ல் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி குமாரபாளையம் நகரில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் பகுதி அளவிலான கூட்டமைப்புகளில் உள்ள மகளிர் குழு பெண்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

இசை நாற்காலி, ஸ்பூன் மூலம் பாட்டிலில் நீர் நிரப்புதல், ஸ்பூனில் எலுமிச்சைக்கனியை வாயில் வைத்த படி ஓடுதல், கோகோ, கட்டம் தாண்டுதல், உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வாகை சூடி, புவிதம், சிங்கப்பெண்ணே , புத்தர் தெரு மகளிர் குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் மகாலட்சுமி, நாராயணி செய்திருந்தனர்.

குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில் சிறந்த சேவையாற்றி வரும் மாவட்ட ஆட்சியருக்கு , மகளிர் தினத்தையொட்டி ஷீல்டு வழங்கப்பட்டது.

நாமக்கல்லுக்கு ஆட்சியர் உமா வந்தது முதல், கோரிக்கை விடுக்கும் நபர் யாராக இருந்தாலும் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த செயல் அனைவருக்கும் மன நிறைவை தருவதாக உள்ளது. இவரது சேவையை பாராட்டி, நாமக்கல் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா தலைமையில், குமாரபாளையம் வந்த ஆட்சியர் கலெக்டர் உமாவிற்கு ஷீல்டு வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர். நிர்வாகிகள் ரேவதி, உஷா, சுஜாதா, விமலா, மல்லிகா உள்பட பலர் பங்கேற்றனர்.

குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில் சிறந்த சேவையாற்றி வரும் திருச்செங்கோடு ஆர்.டி.ஒ. சுகந்திக்கு மகளிர் தினத்தையொட்டி ஷீல்டு வழங்கப்பட்டது.

திருச்செங்கோடு ஆர்.டி.ஒ. சுகந்தி வந்தது முதல், கோரிக்கை விடுக்கும் நபர் யாராக இருந்தாலும் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த செயல் அனைவருக்கும் மன நிறைவை தருவதாக உள்ளது. இவரது சேவையை பாராட்டி, நாமக்கல் மாவட்ட மக்கள் நீதி மய்யம் மகளிரணி அமைப்பாளர் சித்ரா தலைமையில், திருச்செங்கோடு ஆர்.டி.ஒ. சுகந்திக்கு நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். நிர்வாகிகள் ரேவதி, உஷா, சுஜாதா, விமலா, மல்லிகா, தனபால் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News