குமாரபாளையத்தில் மகளிர் தின விழா கொண்டாட்டம்
குமாரபாளையத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.;
குமாரபாளையத்தில் மகளிர் தின விழா மகளிர், குழந்தைகள் நல அணி சார்பில் மக்கள் நீதி மய்யத்தினரால் மாவட்ட அமைப்பாளர் கவிதா தலைமையில் தன்வந்திரி செவிலியர் கல்லூரியில் கொண்டாடப்பட்டது.
மகளிர் நலம், சர்க்கரை நோய் எனும் தலைப்பில் டாக்டர் தங்கவேல் பேசினார். மாவட்ட செயலர் காமராஜ், நிர்வாகிகள் நந்தகுமார், சிவகுமார், மணிமேகலை, சரோஜா, லதா உள்பட பலர் பங்கேற்றனர்.
குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் மகளிர் தின விழா சி.எஸ்.ஐ. நடுநிலை பள்ளியில் அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக குமாரபாளையம் ஜி.ஹெச். தலைமை டாக்டர் பாரதி பங்கேற்று, வாழ்த்தி பேசி, பல மருத்துவ ஆலோசனைகள் வழங்கியதுடன், பல்வேறு போட்டிகளில் பரிசுகள் வென்ற மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இதில் பள்ளி தலைமை ஆசிரியை சுகந்தி, ஆசிரியைகள் ஹெலன், சித்ரா உள்பட பலர் பங்கேற்றனர்.
குமாரபாளையம் சுரபி பவுண்டேசன், ஓம் முருகா மகளிர் சுய உதவி குழு சார்பில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு, புத்தங்கங்கள் வழங்கப்பட்டது. கவுன்சிலர் பழனிச்சாமி பங்கேற்று மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்தார். நிர்வாகிகள் மகாலட்சுமி, திலகா, நாகலட்சுமி, பூமணி, சாந்தி, பத்மா உள்பட பலர் பங்கேற்றனர்.