வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் விஷம் குடித்தனர் - ஒருவர் பலி
குமாரபாளையத்தில், வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் விஷம் குடித்ததில், ஒரு பெண் உயிரிழந்தார்.;
குமாரபாளையம் நாராயணநகரில் வசிப்பவர் லட்சுமி, 38. ராஜா வீதியில் வசிப்பவர் சீனிவாசன், 42, அருவங்காடு பகுதியில் வசிப்பவர் ராமசாமி, 55. இவர்கள் மூவரும் பல்வேறு பிரச்சனைகளின் காரணமாக எலிகளை கொல்ல பயன்படுத்தும் விஷமருந்தியதாக கூறபடுகிறது. நேற்று இவர்கள் காலை 10:00 மணி முதல், மூவரும் அடுத்தடுத்து சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இவர்கள் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 09:00 மணியளவில் லட்சுமி இறந்தார். மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொழில்நிலை பின்னடைவு, குடும்ப பிரச்சனை, கடன் சுமை உள்ளிட்ட பல பிரச்சனை காரணமாக இது போன்ற தற்கொலை சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. மாவட்ட நிர்வாகத்தினர், இது குறித்து பரிசீலித்து அந்தந்த பகுதி ஆசிரியர்களை கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.