அரசு உதவி பெறும் கல்லூரியில் மகளிர் விழிப்புணர்வு கருத்தரங்கம்
குமாரபாளையம் எஸ்.எஸ்.எம் பாலிடெக்னிக் கல்லூரியில் அபெக்ஸ் சங்கம், முன்னேறும் மகளிர் அமைப்பின் சார்பில் மகளிர் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்வி நிறுவனங்களில் மகளிர் மீதான வன்கொடுமையை தடுக்கும் வகையில் ஒரு விழிப்புணர்வு கருத்தரங்கு, அரசு உதவி பெறும் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம் பாலிடெக்னிக் கல்லூரியில் அபெக்ஸ் சங்கம் மற்றும் முன்னேறும் மகளிர் அமைப்பின் சார்பில் நடைபெற்றது.
இதில் ஈரோடு ஸ்கில்வேர் என்ற நிறுவனத்தின் நிறுவனரும், ஸ்கை பவுண்டேசன் இந்தியா அமைப்பின் தூதுவரான சமூக சேவகி கதைசொல்லி சரிதா ஜோ பங்கேற்று பேசினார்.
அப்போது, கல்லூரி மாணவியர்கள் குறிப்பாக தங்களது சுய பாதுகாப்பையும், சுய முன்னேற்றத்தையும் வளர்த்துக்கொண்டு பெண்கள் மீதான வன்கொடுயையை தடுக்கும் வகையில் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
கல்லூரி தலைவர் இளங்கோ, இயக்குநர் நிர்மலா, அபெக்ஸ் சங்க தலைவர் பிரகாஷ், முதல்வர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.