குமாரபாளையம் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது காவிரி நீர்
குமாரபாளையம் குடியிருப்பு பகுதிகளுக்குள் காவிரி நீர் புகுந்தது.
மேட்டூர் அணை நிரம்பியதால் உபரி நீர் முழுவதுமாக திறந்து விடபட்டுள்ளது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குமாரபாளையம் காவிரி கரையோர பகுதிகளான கலைமகள் தெரு, இந்திரா நகர், பழைய காவிரி பாலம் அருகே உள்ள அண்ணா நகர், மணிமேகலை தெரு இந்திரா நகர், ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் காவிரி நீர் புகுந்தது. இங்கு குடியிருந்த நபர்கள் புத்தர் தெரு நகராட்சி துவக்கப்பள்ளி, மற்றும் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். போலீசார், வருவாய்த்துறையினர், நகராட்சி பணியாளர்கள் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு குடியிருப்புவாசிகளை பாதுகாப்பாக தங்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.