மாற்று கட்சிகளில் இருந்து விலகல்: குமாரபாளையம் பா.ஜ.க.வில் ஐக்கியம்
மாற்று கட்சிகளில் இருந்து விலகியவர்கள் குமாரபாளையம் பா.ஜ.க.வில் தங்களை இணைத்துக்கொண்டனர்.;
பா.ஜ.க. சார்பில் மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் தலைமையில், குமாரபாளையத்தில் மாற்றுக்கட்சியில் இருந்து பலர் பா.ஜ.க.வில் இணைந்தனர்.
குமாரபாளையம் ஆதரவற்றோர் மையத்தில் பா.ஜ.க.வினர் அன்னதானம் வழங்கினர். மாற்று கட்சிகளில் இருந்து விலகியவர்கள் பாஜகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
பா.ஜ.க. மேற்கு மாவட்ட செயலர் ராஜேஷ்குமாரின் பிறந்தநாளையொட்டி, காளியம்மன் கோவிலில் மாவட்ட பொது செயலாளர் வக்கீல் சரவணராஜன் தலைமையில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. சுந்தரம் நகர் பகுதியில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் அனைவருக்கும் கேக் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. மாற்றுக்கட்சியில் இருந்து பெண்கள் 15 பேர் உள்ளிட்ட 25 நபர்கள் பா.ஜ.க. கட்சியில் இணைந்தனர். அனைவருக்கும் சால்வை அணிவித்து கட்சியில் இணைத்து கொண்டனர். எதிர்மேடு அன்னை ஆதரவற்றோர் மையத்தில் உள்ள 45க்கும் மேற்பட்ட முதியவர்களுக்கு மதியஉணவு வழங்கப்பட்டது. நிர்வாகிகள் மாவட்ட துணை செயலாளர் கனகராஜ், சேகர், வக்கீல் தங்கவேல், சுகுமார், சண்முகசுந்தரம், மணிகண்டன், சரவணன், மாவட்ட செயலர் சவுமியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
குமாரபாளையத்தில் பா.ஜ.க. கட்சி சார்பில், கட்சி ஸ்தாபன நாள் விழா மாவட்ட பொது செயலர் சரவணராஜன் தலைமையில் கொண்டாடப்பட்டது. படைவீடு பேரூராட்சி, அல்லிநாயக்கன்பாளையம் கிராமத்தில், நாமக்கல் மாவட்ட பா.ஜ.க., விவேகானந்தா கல்லூரி சார்பில், பொது மருத்துவ முகாமினை மாநில துணை தலைவர், முன்னாள் எம்.பி. ராமலிங்கம் துவக்கி வைத்தார். இதில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று, சிகிச்சை பெற்று பயன் அடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை மேற்கு மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் வக்கீல் தங்கவேல், மண்டல தலைவர் கதிரேசன் ஆகியோர் செய்திருந்தனர்.
குமாரபாளையம் நகரில் பள்ளிபாளையம் பிரிவில் நீர் மோர் பந்தலை மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் தர்பூசணி பழங்கள் வழங்கினார். கட்சி நிர்வாகி அருள் என்பவரின் மனைவி சகாயமேரி தீக்காயத்துடன் அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை பெற்று வருகிறார். இவரை மாவட்ட பொது செயலர் சரவணராஜன், மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் வக்கீல் தங்கவேல் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார். நிர்வாகிகள் சரவணன், ஹரிஹரன், மகளிரணி நிர்வாகிகள் இந்திரா, புவனேஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.