குமாரபாளையத்தில் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் போலீசார் வாக்குவாதம்
குமாரபாளையத்தில் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
குமாரபாளையத்தில் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் போலீசார் வாக்குவாதம் செய்தனர்.
பாரத் பந்த்தையொட்டி, குமாரபாளையம் தொழிற்சங்க நிர்வாகிகள் சேலம் சாலை உள்ளிட்ட பல இடங்களில் திறந்துவைக்கப்பட்ட கடைகளை மூட இன்று காலை கூறி வந்தனர். இதனை கண்ட குமாரபாளையம் போலீசார், எந்த கடையினரையும் கடைகளை மூட வற்புறுத்தக்கூடாது என தெரிவித்தனர்.
ஆனால், தொழிற்சங்க நிர்வாகிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் போலீசாருக்கும், தொழிற்சங்கத்தாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், நாங்கள் யாரையும் வற்புறுத்தி கடையை மூட சொல்லவில்லை. எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள் என அமைதியான முறையில்தான் கேட்டோம் என தெரிவித்தனர்.