சாலையின் குறுக்கே கம்பிகள்: 4 மணி நேரத்தில் மின் கம்பம் மாற்றியமைப்பு

குமாரபாளையம் அருகே இடையூறாக இருந்த கம்பியால் மின் கம்பத்தை 4 மணி நேரத்தில் ஊழியர்கள் மாற்றியமைத்தனர்.;

Update: 2021-09-19 02:34 GMT

சேலம் -கோவை புறவழிச்சாலை கோட்டைமேடு பகுதியில் மின் கம்பத்தை மாற்றியமைக்கும் மின் வாரிய ஊழியர்கள்.

குமாரபாளையம் அருகே சேலம் - கோவை புறவழிச்சாலை கோட்டைமேடு பகுதியில் மின் கம்பம் ஒன்று மாற்றியமைக்கும் பணி மின் வாரியத்தினரால் நடைபெற்றது. சாலையின் குறுக்கே மின் கம்பிகள் சென்றதால் அவைகள் அகற்றப்பட்டன.

இந்த பணிகளால் வாகன போக்குவரத்து தடை படாமல் இருக்க பாதை மாற்றியமைக்கப்பட்டது. இதன் வழியாக அனைத்து வாகனங்களும் சென்றன. இதனை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா தலைமையிலான போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். 4 மணி நேரத்தில் மின் கம்பம் மாற்றியமைக்கப்பட்டது.

Tags:    

Similar News