மனைவி மாயம் கணவன் போலீசில் புகார்
குமாரபாளையத்தில் மனைவி மாயமானதாக கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.;
மனைவி மாயம்
கணவன் போலீசில் புகார்
குமாரபாளையத்தில் மனைவி மாயமானதாக கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
குமாரபாளையம் நாராயண நகரில் வசிப்பவர் வடிவேல், 33. தனியார் நிறுவன பணியாளர். இவரது மனைவி பூமிகா, 25. இவர் தன் குழந்தையை பார்த்துக்கொண்டு வீட்டில் இருந்து வருகிறார். பக்கத்து வீட்டில் இருக்கும் கார்த்தி என்பவருடன் பேசி வந்ததால், வடிவேல், பூமிகாவை கண்டித்துள்ளார். நேற்று முன்தினம் மாலை 01:30 மணியளவில், வேலைக்கு சென்ற வடிவேல், தன் மனைவி பூமிகாவுக்கு போன் செய்துள்ளார். ஆனால், போன் கட் ஆகி விட்டது. வீட்டிற்கு வந்து பார்த்த போது, பூமிகா காணவில்லை. இது குறித்து, குமாரபாளையம் போலீசில், காணாமல் போன தன் மனைவியை கண்டுபிடித்து தருமாறு புகார் கொடுத்துள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.