குமாரபாளையத்தில் வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு நிரந்தர தீர்வு என்ன?

குமாரபாளையத்தில் வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட்ட முன்னாள் அமைச்சர் தங்கமணி மாற்று இடமே நிரந்தர தீர்வு என்றார்.

Update: 2022-08-04 11:15 GMT

குமாரபாளையத்தில் காவிரி கரையோர வெள்ள பாதிப்பு பகுதிகளை முன்னாள் அமைச்சர் தங்கமணி பார்வையிட்டார்.

குமாரபாளையம் காவிரி கரையோர வெள்ள பாதிப்பு பகுதிகளை முன்னாள் அமைச்சர் தங்கமணி பார்வையிட்டார்.பின்னர் அவர்  நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:-

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியபடி, வெள்ள பாதிப்பு மக்களுக்கு மூன்று வேளை உணவு அ.தி.மு.க. சார்பில் வழங்கப்படும். ஒரு சில நபர்கள் வெள்ளம் சூழ்ந்த இடத்தை விட்டு வர மறுத்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு வர வேண்டும். முன்பு அமைச்சராக இருந்த போது இவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி தருகிறேன் என்று கூறினேன். ஆனால் அவர்கள் அதற்கு மறுத்து விட்டார்கள். தற்போது மாற்று இடம் கேட்டு வருகிறார்கள். இவர்களுக்கு மாற்று இடம் வழங்குவதே நிரந்தர தீர்வாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் நகர செயலாளர் பாலசுப்ரமணி, துணை செயலாளர் திருநாவுக்கரசு, கவுன்சிலர் புருஷோத்தமன், முன்னாள் நகர செயலர் குமணன், முன்னாள் கவுன்சிலர்கள் அர்ச்சுனன், ரவி, உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News