ஒட்டக சவாரி செய்ய வேண்டுமா? குமாரபாளையத்திற்கு உடேன வாங்க...

ஒட்டக சவாரி செய்ய வேண்டுமா? குமாரபாளையத்திற்கு உடேன வந்து தான் பாருங்களேன்.;

Update: 2023-02-27 13:45 GMT

குமார பாளையம் கடைவீதியில் ஒட்டக சவாரி.

குமாரபாளையம் கடைவீதியில் தற்போது  ஒட்டக சவாரி நடந்து வருகிறது.

கோவில்கள், கடைவீதிகள் ஆகியவற்றில் யானைகளை கொண்டு வந்து ஆசீர் வாதம் என்ற பெயரில்  காசு கேட்க வைப்பது வழக்கமாக நடந்து வருவது. தற்போது ஒட்டகத்தை வைத்துகொண்டு, கடைவீதிகளில் காசு கேட்பது, குழந்தைகளை சவாரி செய்வது என தொடங்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம்  குமாரபாளையம் பகுதியில் திருவிழா நடந்து வருவதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஒட்டகத்தின் மேல் சவாரி செய்ய வைத்து வருகிறார்கள். ஒரு நபருக்கு 20 ரூபாய் வீதம் வசூலிக்கப்படுகிறது.

தற்போது தமிழகத்தில் கட்டுமானம், சாலை அமைத்தல், ரயில்வே பாலம் கட்டுதல், தண்டவாளம் அமைத்தல், விசைத்தறி, ஓட்டல், டீ கடைகள், பேக்கரி, சலூன், சுமை தூக்குதல், மார்க்கெட், ஸ்பின்னிங், திருப்பூர் பனியன் மில்கள் உள்ளிட்ட பல இடங்களில் வட மாநில தொழிலாளர்கள் வேலைக்கு சேர்ந்துள்ளனர். இந்த நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நமது மாநில ஆட்கள் வேலை இழந்து வருகிறார்கள். பல இடங்களில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழர்கள் போராட்டம் நடத்தியும் வருகிறார்கள்.

தமிழர்கள் பல வெளிநாடுகளுக்கு சென்று பல வேலைகளை செய்து வந்த நிலையில், ஒட்டகம் மேய்த்ததாகவும் கூறப்பட்டது. தற்போது ஒட்டகமே நமது ஊருக்கு வந்துவிட்டது. ஆனால் அதனை வைத்து பிழைப்பு நடத்தவும் வடமாநிலங்களில் இருந்து  பல குடும்பத்தினர் வந்து விட்டனர். அந்த வகையில்   ஒட்டக சவாரியில் கூட தமிழர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தான்  உள்ளது. எனவே இனி தமிழர்கள் ஒட்டகம் மேய்ப்பதற்காக வளைகுடா நாடுகளுக்கு செல்லாமல் தமிழகத்திலேயே ஒட்டக சவாரி என்ற பெயரில் அதனை கூட மேய்ப்பதற்கு வழி இருக்கிறதா? என பார்க்கலாம்.

Tags:    

Similar News