குமாரபாளையத்தில் கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில் கூலி உயர்வு கேட்டு விசைத்தறி சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.;

Update: 2023-06-11 15:05 GMT

குமாரபாளையத்தில் கூலி உயர்வு கேட்டு சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

குமாரபாளையத்தில் விசைத்தறி கூலி உயர்வு கேட்டு சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் விசைத்தறி கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமல் படுத்தக்கோரி சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் சார்பில் நகர தலைவர் சரவணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விசைத்தறி தொழிலாளிக்கு எட்டு மணி நேர வேலை, மாதம் ரூ. 26 ஆயிரம் சம்பளம், 60 வயதிற்கு மேல் 9 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும், 20 சதவீதம் கூலி உயர்வு ஒப்பந்தத்தை விசைத்தறி உரிமையாளர்கள் உடனே அமல்படுத்த வேண்டும், பிராவிடண்ட் பண்ட், இலவச வீடு வழங்க வேண்டும், சுகாதாரம், குழந்தைகள் கல்வி ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும், நலவாரிய குளறுபடிகளை சரி செய்து பணப்பயன்களை உயர்த்திக் கொடுக்க வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், சாயப்பட்டறை கழிவுநீர் காவிரி ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும், அரசு அறிவித்த பொது சுத்திகரிப்பு நிலையத்தை உடனே அமைக்க வேண்டும், மின் கட்டண உயர்வு, பஞ்சு விலை உயர்வு, கட்டுப்படுத்த வேண்டும், விசைத்தறியில் உற்பத்தியாகும் ஜவுளி ரகங்களுக்கு உரியவிலை கிடைத்திட உதவி செய்து, விசைத்தறி தொழில் அழியாமல் காக்க வேண்டும், என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட செயலாளர் அசோகன், நகர செயலர் பாலுசாமி, நகர பொருளாளர் வெங்கடேசன், நகர உதவி செயலர் மோகன், நகர துணை தலைவர் சக்திவேல், உள்ளிட்ட விசைத்தறி தொழிலாளர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News