குமாரபாளையத்தில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் கூலி தொழிலாளி தற்கொலை
குமாரபாளையத்தில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஆனங்கூர் சாலை சுந்தரம் நகர் அருகே வசிப்பவர் ரமேஷ், 37. அச்சு பிணைக்கும் கூலி தொழிலாளி. இவரது மனைவி சாந்தி, 36. மாற்றுத்திறனாளியான இருவருக்கும் திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இதுவரை அவர்களுக்கு குழந்தைகள் இல்லாததால் மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மனமுடைந்த ரமேஷ் தினமும் குடித்து விட்டு வந்து, மனம் நிம்மதியில்லாமல் உள்ளது என்று கூறி வருவாராம். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் விட்டதில் உள்ள மின் விசிறியில் சேலையால் தூக்கிட்ட தற்கொலை செய்து கொண்டார்.
இதனைக்கண்ட மனைவி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது இவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.