சாலையில் நடுவில் உள்ள மின் கம்பங்களை சாலை ஓரமாக அமைக்க மக்கள் நீதி மய்யம் கலெக்டரிடம் மனு
குமாரபாளையத்தில் பிரதான சேலம் சாலையில் நடுவில் உள்ள மின் கம்பங்களை சாலை ஓரமாக அமைக்க கோரியும், ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும் மாவட்ட கலெக்டரிடம் மக்கள் நீதி மைய்யம் சார்பில், மண்டல தலைவர் காமராஜ் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது.;
சாலையில் நடுவில் உள்ள மின் கம்பங்களை சாலை ஓரமாக அமைக்க மக்கள் நீதி மய்யம் கலெக்டரிடம் மனு
குமாரபாளையத்தில் பிரதான சேலம் சாலையில் நடுவில் உள்ள மின் கம்பங்களை சாலை ஓரமாக அமைக்க கோரியும், ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும் மாவட்ட கலெக்டரிடம் மக்கள் நீதி மைய்யம் சார்பில், மண்டல தலைவர் காமராஜ் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது.
குமாரபாளையம் அருகே, சேலம் கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவு பகுதியிலிருந்து, குமாரபாளையம் நகரம், பள்ளிபாளையம் பிரிவு பகுதி வரை, சாலையின் நடுவில் மின் கம்பங்கள் அதிக அளவில் உள்ளன. சாலையின் இருபுறமும், சாலையின் நடுவே உள்ள மின்சார கம்பங்களை அகற்றி, சாலை ஓரங்களில் அமைக்க வேண்டியும், சாலையின் இரு புறமும் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக சேலம் மண்டல செயலாளர் காமராஜ் தலைமையில் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. குமாரபாளையம் நகர செயலாளர் மனோகரன், நற்பணி அணி மாவட்ட அமைப்பாளர் வெங்கடேஷ், மாவட்டத் துணைச் செயலாளர் மகுடேஸ்வரன், நிர்வாகிகள் ராஜா, தவமணி உள்பட பலர் பங்கேற்றனர்.
படவிளக்கம் :